Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக ரத்தினவேல் நியமனம்?

0

'- Advertisement -

 

அதிமுக கட்சியின் நிரந்தர பொது செயலாளர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் பல முன்னணி தலைவர்கள் பிரிந்து சென்றாலும் இன்று முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தொண்டர்கள் சிறப்பாக பணியாற்றி உள்ளனர்.

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த வெல்லமண்டி நடராஜன் ஓபிஎஸ் அணியில் இருந்ததால்

எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பதவியேற்ற பின் அவரை நீக்கியதால் கடந்த ஓராண்டுக்கு மேலாக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் பதவி காலியாக உள்ளது.

இந்த மாநகர் மாவட்ட செயலாளர் போட்டியில் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு சிறிது காலம் சென்று அதிமுகவில் இணைந்து சிறப்பாக பணியாற்றி வரும் சீனிவாசன் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதில் ஆவின் சேர்மன் நடத்தும் நிகழ்ச்சிக்கு சென்றால் சீனிவாசன் கோபித்துக் கொள்வார் என சிலரும்,சீனிவாசன் நடத்தும் நிகழ்ச்சிக்கு சென்றால் கோபித்துக் கொள்வார் என சிலரும் எந்த அதிமுக நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வருகின்றனர்.இதனால் திருச்சியில் மாநகரில் நடைபெறும் அதிமுக நிகழ்ச்சிகள் கூட்டங்களில் தொண்டர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனை தவிர்க்க ஒருங்கிணைந்த (திருச்சி,கரூர், அரியலூர், பெரம்பலூர்) திருச்சி மாவட்ட அதிமுக செயலாளராக சிறப்பாக பணியாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி.ரத்தினவேல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஒருங்கிணைத்து செல்வதில் அனுபவம் மிக்கவர் மற்றும் திறமையானவர்.

திருச்சி வடக்கு மாவட்ட செயலாளராக திறமையாக பணியாற்றி வந்தார்.
ஆனால் உடல் நலத்தை காரணம் காட்டி அவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.அவருக்கு பதிலாக நியமிக்கப்பட்ட வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி தில்லைநகரில் உள்ள தனது அலுவலகத்தில் பெரும்பான்மையான நேரம் தூங்கி வருகிறார் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

தற்போது மாவட்ட செயலாளர் பதவி எதிர்பார்த்து அதிமுகவில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஆர்.மனோகரன் மற்றும் இவருக்கு முன்னரே அமமுக வில் இருந்து அதிமுகவில் இணைந்த
ஜெ. சீனிவாசன் ஆகிய இருவருக்கும் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

எனவே திருச்சி மாவட்ட அதிமுக தொண்டர்கள் இடையே உள்ள கோஷ்டி பூசலை தீர்த்து அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை இணைத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக செயல்பட வைத்து திருச்சி பாராளுமன்ற தொகுதியை அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வெல்ல முக்கிய காரணமாக இருப்பார் ரத்தினவேல்.

இதற்கு உதாரணம் திருச்சி இரண்டாவது தொகுதியில் அன்பில் பொய்யாமொழி மறைவிற்கு பின் நடைபெற்ற இடைத்தேர்தலின் கள்ள ஓட்டு போடவும் ஓட்டு சக்திகளை செல்லவும் முயன்ற திமுகவினரை தடுத்து நிறுத்தியதால் இவரது மண்டையை அடித்து உடைத்தனர் திமுகவினர். ரத்தம் ஒழுக ஒழுக நின்று திமுகவினர் கள்ள ஓட்டு போடாமல்,ஓட்டுப் பெட்டிகளை தூக்கிச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியவர் ரத்னவேல்,இந்தக் கலவரத்தின் போது தற்போதைய மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் பத்மநாதன், மெஜஸ்டிக் பக்ருதீன்,அருள்ஜோதி உள்ளிட்ட வரும் உடன் இருந்தனர்

இவ்வாறு எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் முதல் அதிமுகவிற்கு உளைத்த ரத்தினவேலை மாநகர் மாவட்ட செயலாளராக நியமித்தால் திருச்சி அதிமுகவில் கோஷ்டி பூசல் எதுவும் ஏற்படாது.

எனவே வரும் இருபதாம் தேதி மதுரையில் நடைபெறும் உள்ள எழுச்சி மாநாட்டில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக ரத்தினவேல் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றது.

இதேபோன்று திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் மீது எடப்பாடி பழனிச்சாமி மிகுந்த மரியாதை வைத்துள்ளதால் அவருக்கும் மாநகர் மாவட்ட செயலாளர் பதவி வழங்க வாய்ப்புகள் உள்ளது.

மாநகர் மாவட்டத்திற்கு ப.குமார் நியமிக்கப்பட்டால் புறநகர் மாவட்ட செயலாளராக ரத்தினவேல் பெயர்
மதுரை மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிய வருகிறது.

இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என். நேருவை எதிர்த்து போட்டியிட அதிமுகவில் யாரும் முன் வராத நிலையில் துணிந்து போட்டியிட்ட கருமண்டபம் பத்மநாதன் அமைதியாக மாவட்ட செயலாளர் ரேசில் உள்ளார்.

நேருவை எதிர்த்து போட்டியிட்டு பல கோடியை பெற்று விலை போய்விடுவார் என தற்போது திமுகவில் உள்ள டாக்டர் சுப்பையா,அப்போது அதிமுக மாநகர் மாவட்ட மகளிர் அணி தலைவியாக இருந்த தமிழரசி சுப்பையா உள்ளிட்ட பலரும் புகார் கூறிய நிலையில் ஒரு ரூபாய் பணம் கூட எதிர்பார்க்காமல் கட்சிக்காக உழைத்து இபிஎஸ், ஓபிஎஸ் யார் தலைமைக்கு வருவார் என தெரியாமல் திணறி இன்று எடப்பாடி தலைமையை ஏற்று சிறப்பாக செயலாற்றி வரும் இவருக்கும் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் பதவி கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக அதிமுக தொண்டர்கள் கூறுகின்றனர்.

எதுவோ அதிமுகவில் இருந்து பிரிந்து மாற்று அணி சென்று மீண்டும் அதிமுகவில் இணைந்தவர்களுக்கும், திமுக அமைச்சர் நேருவின் விசுவாசிகளாக இருப்பவர்களுக்கும் மாவட்ட செயலாளர் பதவி வழங்காமல் அதிமுகவில் அடிப்படை தொண்டர்களாக இருந்து வளர்ந்த விசுவாசிகளுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கினால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறலாம் என்பது உண்மையே.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.