திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான
இலவச மருத்துவ முகாம்.
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில்
குழந்தைகள் நல
இலவச மருத்துவ முகாம் நேற்று
நடைபெற்றது.
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் குழந்தைகள் நல
மருத்துவ முகாமை
ப்ரண்ட்லைன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர்
டாக்டர்.ராதாகிருஷ்ணன் தலைமையில் குழந்தைகள் நல
மருத்துவர் முத்துவேல்
குழந்தைகளுக்கு பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகளை
வழங்கினார்.
சளி, காய்ச்சல், இருமல் வயிற்றுப் போக்கு, பச்சிளம்
குழந்தைகளுக்கான சிறந்த சிகிச்சை
இருதயம், நுரையீரல், மூளை,
சிறுநீரகம் சம்பந்தப்பட்ட அனைத்து
நோய்களுக்கும் சிகிச்சை
அளிக்கப்பட்டது. அலர்ஜி, ஆஸ்துமா மூளை வளர்ச்சி குன்றிய
குழந்தைகளுக்கான சிகிச்சை மற்றும் ஆலோசனை,
குழந்தைகளின் உணவு முறை, ஊட்டச்சத்து, வளர்ச்சி பற்றிய சந்தேகங்களுக்கு ஆலோசனை தடுப்பூசி பற்றிய அனைத்து சந்தேகங்களுக்கும் ஆலோசனை மரபணு கோளாறுகள் கொண்ட குழந்தைகளுக்கான ஆலோசனை மற்றும் சிறப்பு சிகிச்சை, ஆட்டிஸம் போன்ற நோய்களுக்கான சிறந்த ஆலோசனை ஆகியவைகளை
வழங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் சுமார் 100 குழந்தைளுடன் பெற்றோர் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சையும், ஆலோசனைகளையும்
பெற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை செய்தி மக்கள் தொடர்பாளர் ஸ்டீபன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.