லால்குடியில் ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தார் மாவட்ட செயலாளர் ப.குமார்.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம்
லால்குடி ஸ்ரீ மகா மாரியம்மன் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற 57 ஆம் ஆண்டு மாபெரும் ஜல்லிக்கட்டு விழா
கோலாகலமாக நடைபெற்றது..
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் அவர்கள் சாமி தரிசனம் செய்து பின்னர் ஜல்லிகட்டு காலை முதல் காளையை அவிழ்த்துவிட்டு துவக்கி வைத்தார்.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் சார்பில் கலந்து கொண்ட அனைத்து காளைகளுக்கும் வீரர்களுக்கும் வேட்டி சட்டையையும்
வெற்றி பெற்ற வீரர்களுக்கு மாடுகளுக்கும் பண தொகை பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை செயலாளர் காத்தான்அவர்கள் மேற்கொண்டார்கள்.
உடன்
ஒன்றிய கழகச் செயலாளர்கள்.
சூப்பர்TNT.நடேசன் மற்றும் D.அசோகன் மற்றும் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் முன்னாள் எம்எல்ஏ S.M.பாலன் முன்னாள் மாவட்ட கழக அவைத்தலைவர் அன்பில் தர்மதுரை,
மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் VDM.அருண் நேரு,பேரூர் கழக செயலாளர் பொன்னி சேகர்,மற்றும் சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் S.சகாதேவ்பாண்டியன்,மீனவரணி கண்ணதாசன்,மற்றும் கழக முன்னோடிகள் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் பங்கேற்றனர்.