Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கோட்டை காவல்நிலையத்தில் சிசிடிவி , வரவேற்பறை. ஆணையர் திறந்து வைத்தார்

0


கோட்டை காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சி துவங்கி வைப்பு.

திருச்சி மாநகர கோட்டை காவல் நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட வரவேற்பாளர் அறை, ஆய்வாளர் அலுவலகம் மற்றும் CCTV கேமரா கண்காணிப்பு கட்டுபாட்டு அறை ஆகியவற்றை இன்று திருச்சிராப்பள்ளி மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன், இ.கா.ப அவர்களால் திறந்து வைத்து காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது மேலும் அரசு பள்ளிகளில் மாணாக்கர்களில் நன்கு பயிலும் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் புத்தகம் மற்றும் எழுது பொருட்கள் இலவசமாக வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.

மேலும் இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) த ஆ. பவண் குமார் ரெட்டி, இ.கா.ப, காவல் உதவி ஆணையர், கோட்டை சரகம் (சட்டம் மற்றும் ஒழுங்கு), கோட்டை சரக காவல் ஆய்வாளர்கள், நியூரோ ஒன் மருத்துவமனை மருத்துவர், ப்ரண்ட் லைன் பல்நோக்கு மருத்துவமனை நிர்வாக இயக்குநர், காவேரி மருத்துவமனை நிர்வாகம், சாரதாஸ் ஜவுளிகடை நிர்வாகம், மாங்களா டிரேடர்ஸ் உரிமையாளர், வாசி கண்ஸ்ட்ர க்சன்ஸ், வழக்கறிஞர் செந்தில்நாதன் மற்றும் S.R.புத்தக நிலையம் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் மூலம் காவல் நிலையத்திற்கு வரும் பொது மக்கள் அமருவதற்காக இருக்கைகளுடன் கூடிய வரவேற்பாளர் அறை மற்றும் 112 CCTV கேமரா ஒருங்கிணைக்கப்பட்ட கண்காணிப்பு அறை 24 மணி நேரமும் கோட்டை காவல் நிலைய சிறப்பு கட்டுபாட்டு அறை மூலம் கண்காணிக்கும் செயல்முறை நடைமுறைபடுத்துப்படுகிறது.

மேலும் இளைஞர் ஒளிர் கவினுலகு திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்ட 15 கல்வியில் சிறந்து விளங்கும் அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களின் கல்விக்கு உதவும் வகையில் தேவையான எழுது பொருட்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நடைமுறையானது தொடர்ச்சியாக அதிக அளவில் தகுதியானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தக்க உதவிகள் அளிக்கப்படும்.

இவ்விழாவிற்கு உதவிய உதவிய நிர்வாகத்தினரையும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டியார்கள்.

Leave A Reply

Your email address will not be published.