இந்தியாவின் டிஜிட்டல் சொத்து மேலாண்மை தளமான டிஜிபாக்ஸ் நிறுவனம் 72வது குடியரசு தினத்தையொட்டி அதன் பயனாளர்களுக்கு ‘சுவதேசி ஸ்டோரேஜ்’ என்னும் திட்டத்தை அறிமுகம்
செய்துள்ளது.
ஜனவரி 26 முதல் இந்த தளத்தில் பதிவு செய்யும் பயனாளர்களுக்கு உள்நாட்டு தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஆதரிப்பதற்காக சிறப்பு சலுகைகளை இந்நிறுவனம் வழங்குகிறது.
இந்த பயனாளர்கள் அனைவருக்கும் 26 ஜிபி இலவச ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.
டிஜிபாக்சை கடந்த மாதம் நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கன்ட் கடந்த மாதம் துவக்கி வைத்தார். இந்த தளத்தில் பயனர் கணக்கை துவங்கி முதல் பயனராக தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்த தளம் இந்திய அரசின் தொலைநோக்கு திட்டங்களான ‘ஆத்மநிர்பர் பாரத்’ மற்றும் ‘வோக்கல் பார் லோக்கல்’ மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் தரவு உள்ளூர் மயமாக்கல்
முன்னுரிமைகளுக்கு ஏற்ப உள்ளது. எல்லா கோப்புகளையும் ஒரே மையப்படுத்தப்பட்ட இடத்தில் சேமிக்க இது எளிதான மற்றும் பாதுகாப்பான வழியை வழங்குகிறது.
இது குறித்து தலைமை செயல் அதிகாரி அர்னாப் மித்ரா கூறுகையில், இந்த தளம் துவங்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை 4 லட்சம் பயனர்கள் இதில் இணைந்துள்ளனர். மேலும் டிஜிபாக்ஸ் ஒரு ‘மேட் இன் இந்தியா’ தயாரிப்பு என்பதால் குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக ‘சுவதேசி ஸ்டோரேஜ்’ என்னும் திட்டத்தில் எங்களின்
புதிய பயனர்களுக்கு 26ஜிபி ஸ்டோரேஜ் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தில்
உள்நாட்டு டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் விதமாக ‘ஸ்டோர், சேவ் மற்றும் ஷேர் இன் இந்தியா’
மற்றும் ‘வோக்கல் பார்லோக்கல்’ ஆகிய திட்டங்களின் மூலம் எங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறோம்.
மாதத்திற்கு 30 ரூபாயில் தொடங்கி மாதாந்திர மற்றும் வருடாந்திர திட்டங்களில் கிடைக்கிறது.
இதில் பதிவு செய்யும் பயனர்கள் பெரிய அளவிலான ஆவணங்கள், உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள், வீடியோக்கள், பிடிஎப்-கள் ஆகியவற்றை
எளிமையாக கையாள முடியும். இந்த தளத்தை பயனர்கள் எளிமையாக கையாள்வதோடு அனைத்து விதமான
கோப்புகளையும் சில வினாடிகளில் பரிமாற்றம் செய்ய முடியும் என்று தெரிவித்தார்.