Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஹெல்மெட் அணிய சொல்வது ஏன்?- கவர்னர் விளக்கம்

0

புதுவையில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு போலீசார் ரூ.1000 அபராதம் விதித்தனர். இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஹெல்மெட் அணிய சொல்வது ஏன்? என்பது தொடர்பாக கவர்னர் கிரண்பேடி விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- ஹெல்மெட் அணியவேண்டும் என்று நான் திரும்ப திரும்ப சொல்வதில் காரணம் இருக்கிறது. எனக்கு 6 வயதாக இருக்கும்போது ஸ்‌‌கூட்டரில் சென்ற எனது தந்தை விபத்தில் சிக்கினார்.

அவர் ஹெல்மெட் அணியாததால் தலையில் காயம்பட்டு பல நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனது தாயார் என்னையும், எனது சகோதரிகளையும் பார்த்து உங்கள் தந்தை இந்த இரவினை தாண்டிவிட்டால் மறுநாள் பாதுகாப்பானது என்று கூறினார். அப்போது நாங்கள் அடைந்த துயரம் அளவில்லாதது.

ஹெல்மெட் அணியாதவர்கள் விபத்தில் சிக்கும்போது அவரது குடும்பத்தினரும், அவர்களை சார்ந்தவர்களும் கடும் துயரம் அடைகின்றனர். எனவே தயவு செய்து ஹெல்மெட் அணியுங்கள்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.