Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மரங்களை பாதுகாக்க பிரவுன் கிராஸ் அமைக்க கோரி மக்கள் சக்தி இயக்கத்தினர் திருச்சி கலெக்டர் மனு.

0

'- Advertisement -

 

மரம் காக்க
(Tree Helpline phone number) கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் need for brown cross அமைக்க சமூக ஆர்வலர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

மரம் காக்க
(Tree Helpline phone number) கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்க, மனிதர்களுக்கு உதவ இந்தியன் ரெட் கிராஸ், கால்நடைகளுக்கு உதவ ப்ளூ கிராஸ் இருப்பதை போல மரத்தை காக்க பிரவுன் கிராஸ் அமைக்க
தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி.நீலமேகம் ,
இணைச்செயலாளர், ஆர்.கே.ராஜா, தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பால் குணா, லோகநாதன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர், யோகா ஆசிரியர் விஜயகுமார், சாலை பயனீட்டாளர் நல அமைப்பு நிர்வாக அறங்காவலர் அய்யாரப்பன் உள்ளிட்டோர் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் மக்கள் குறைதீர் நாளன்று கோரிக்கை மனு அளித்தனர்.

கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

இயற்கை வளங்களைக் காக்க அரசு பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் திருச்சிராப்பள்ளியில் மரம் காக்க இலவச கட்டண தொலைபேசி எண் வழங்க, மனிதர்களுக்கு உதவ இந்தியன் ரெட் கிராஸ், கால்நடைகளுக்கு உதவ ப்ளூ கிராஸ் போல மரத்தை காக்க பிரவுன் கிராஸ் அமைக்க வேண்டுகிறோம்.

அரசிற்கு சொந்தமான இடங்களில் உள்ள மரங்களில் விளம்பரப் பலகைகள் அமைப்பதால், சாலையோரம் அமைக்க படக்கூடிய விளக்குகள், புதை வடிகால் மற்றும் புதை கேபிள்களால்,
மரம் வாழ்விடத்தை தடுக்கும் வகையில் சிமெண்ட் பூச்சால் மரத்தின் வாழ்நாள் தடுக்கப்படுகிறது அழிக்கப்படுகிறது, சிதைக்கப்படுஙிறது.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி இடங்களில் சாலை அமைத்தல், ஒளிவிளக்கு அமைத்தல், புதைவடிகால் அமைத்தல் உட்பட பல்வேறு நகர்ப்புற கட்டமைப்புகளுக்காக இயற்கை வளங்கள் பல்வேறு விதங்களில் அளிக்கப்பட்டும் துஷ்பிரயோகப் படுத்தப்பட்டும் வருகிறது. எனவே இயற்கை வளங்களை காக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கையினையும் மேற்கொள்ள வேண்டும்.மேலும் இயற்கை வளங்களை காக்க, மரம் வெட்டுபவர்கள் மீதும், துஷ்பிரயோகம் செய்பவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் பொது கட்டணமில்லா தொலைபேசியை அறிமுகப்படுத்தியும் வாட்ஸ் அப் மூலம் படங்களை பதிவேற்றம் செய்து புகார் அளிக்க கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

மாவட்ட ஆட்சியரகம், மாநகராட்சி அலுவலகம், சரக காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்கும் வகையில் பொது கட்டண தொலைபேசியை அறிவிக்க வேண்டுகிறோம் மேலும் மனிதர்களுக்கு உதவ இந்தியன் ரெட் கிராஸ், கால்நடைகளுக்கு உதவ ப்ளூ கிராஸ் போல மரத்தை காக்க பிரவுன் கிராஸ் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர் மனுவினை மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளரிடம் அளித்து தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.