Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி திருவானைக்கோவில் 2 பழமையான சிவலிங்கங்கள் கண்டுபிடிப்பு.

0

'- Advertisement -

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் புனரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது.

Ad banner

இந்நிலையில் இந்த பணியின்போது இரு பழமையான சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டன.

பஞ்சபூதத் தலங்களில் நீருக்குரிய தலமாக விளங்குவது திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள
குபேரலிங்கேஸ்வரர் சன்னதி அருகே உள்ள சுற்றுச்சுவரை ஒட்டியிருந்த புதர்களை அகற்றியபோது, அந்த இடத்தில் 3 மற்றும் 2 அடிகளில் இரு பழமையான சிவலிங்கங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் பார்வையிட்டு, வழிபட்டுச் சென்றனர்.

படத்தில் திருவானைக்காவல்
அ/மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட இரு சிவலிங்கங்கள் உள்ளன.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.