Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கமிஷனரிடம் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத்தினர் புகார் மனு…

0

திருச்சியில் கல்யாணராமன் மீது குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் மனு!!


மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றி அவதூறாக பேசிய பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாதினர் மனு அளித்தனர்.

இஸ்லாமியர்கள் வணங்கும் முகமது நபிகளை கொச்சைப்படுத்தி பேசிய கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும், தொடர்ந்து இதுபோன்ற அவதூறு பேசி வரும் கல்யாணராமன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் பல முறை தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், சமுதாயத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்ளும் கல்யாணராமனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும் திருச்சி திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு முன்பாக யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் மாநிலத் தலைவர் பீமா நகர் ராபிக் தலைமையில் மாநில செயலாளர் அப்பாஸ் மாநில பொருளாளர் பகுதியில் மாநில நிர்வாகிகள் இர்பான், அன்சார், மற்றும் திருச்சி மாவட்ட தலைவர் ராயல் சாதிக், செயலாளர் சேக் மைதீன், பொருளாளர் ஷாஹீன் , துணைத்தலைவர் உசேன் ரபிக், துணை செயலாளர் முஸ்தபா மற்றும் கிளை நிர்வாகிகள் என 200க்கும் மேற்பட்ட யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர்கள் கமிஷனர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

பின் காவல் துறையின் அறிவுறுத்தலின் பேரில் பத்து நபர்கள் மட்டும் ஆணையரை சந்திக்க அனுமதிக்கப்பட்டு திருச்சி மாநகர காவல் ஆணையரை சந்தித்து மனு அளித்து வந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.