
திருச்சி: டாஸ்மாக் பாரில் தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்த
2 வாலிபர்கள் கைது.
திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 38). இவர் பி.பி.ஏ பட்டதாரியான இவர் திருச்சியில் உள்ள தனியார் கார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று காந்தி மார்க்கெட் பகுதி நெல்பேட்டை மதுக்கடை பாரில் நின்று கொண்டிருந்தபோது இரண்டு வாலிபர்கள் அவரிடம் இருந்து செல்போனை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ராம்குமார் காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் பீட்டர் வழக்குப்பதிந்து வரகனேரி பென்சனர் தெருவை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 27), சரவணகுமார் (வயது 32) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது .
இதில் கைதான மோகன்ராஜ் மீது காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் 8 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

