Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உயர் கல்வி வழிகாட்டுதல் மாணவர் கலந்தாய்வு கூட்டத்தில் கட்டணமின்றி படிக்க வாய்ப்புள்ள கல்லூரிகள் போன்று பல்வேறு பயனுள்ள தகவல்.

0

'- Advertisement -

 

உயர்கல்வி வழிகாட்டுதல் மாணவர் கலந்தாய்வு கூட்டம்.

தமிழ்நாடு கல்வி உதவி மையம் சார்பில் துணை மருத்துவ படிப்புகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் மாணவர் கலந்தாய்வு கூட்டம் திருச்சி இந்திய மருத்துவ மன்றத்தில் நடைபெற்றது.

இதில் அரசு மருத்துவ இயக்குனரகம் வழங்கும் துணை மருத்துவ செவிலியர் படிப்புகளுக்கான இணைய வழியில் விண்ணப்பிக்கும் முறை,
உதவித்தொகை பெறுவதற்கான வழிமுறைகள், கல்வி கட்டணம் இன்றி படிக்க வாய்ப்பளிக்கும் கல்லூரிகள் போன்ற பல்வேறு பயனுள்ள ஆலோசனைகளை தமிழ்நாடு கல்வி உதவி மைய ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், தமிழ்நாடு மெடிக்கல் லேபரட்டரி அசோசியேஷன் தலைவர் மார்ட்டின் தேவதாஸ், செயலாளர் லோகநாதன் மெர்சலின், கல்வி நிறுவனத் தாளாளர் ஜெயகாந்தி ஆகியோர் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்கில் இந்தியா உறுப்பினர்கள் நாகேந்திரன்,
ஜெயகாந்தி, அழகர்ராஜா, ஷாஜினி, சஹாயி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

கூட்ட முடிவில்
சவரிமுத்து நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.