திருச்சி தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அஞ்சலி
திருச்சி தெற்கு மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டத்தில்
ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அஞ்சலி.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் அவரது புகழுக்கு மென்மேலும் மாண்பு சேர்க்கும் வகையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது , மற்றும் கழக ஆக்கப் பணிகளை மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது .
கூட்டத்தில் இறுதியாக ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது
கூட்டத்தில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகரன், வண்ணை அரங்கநாதன், சபியுல்லா, கவிஞர் சல்மா, மாவட்டத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், மூக்கன், லீலாவேலு, குணசேகரன், கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாநில, மாவட்டச் செயலாளர் , மாநகர கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மண்டல தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய, பேரூராட்சி தலைவர்கள், மாவட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.