தேசிய தூய்மை பணியாளர்களின் ஆணையத் தலைவர் வெங்கடேசனுக்கு திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன் தலைமையில் சிறப்பான வரவேற்பு.
தேசிய தூய்மை பணியாளர்களின் ஆனைய தலைவர் எழுத்தாளர் ம.வெங்கடேசனுக்கு திருச்சி மாவட்ட பா.ஜ.க தலைவர் ராஜசேகரன் தலைமையில் திருச்சி பால்பண்ணையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது .
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊடக பிரிவு தலைவர் சி. இந்திரன், அரியமங்கலம் மண்டல் தலைவர் சண்முகவடிவேல், அகில இந்திய பாதுகாப்பு துறையின் பட்டியல் இன செயலாளர் ஓ.எப்.டி அசோக்பாலகுமார் மற்றும் அகில இந்திய பாதுகாப்பு துறை பட்டியல் இன கூட்டமைப்பு மாநில தலைவர் ஓ.எப்.டி ரமேஷ் குமார் மற்றும் திரளானூர் கலந்து கொண்டனர்.
பின்னர் அரசு விருந்தினர் மாளிகையில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் சந்தித்து பேசிய போது பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.