ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தின் சர்வதேச தூதுவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோகனுக்கு திருச்சி கலெக்டர் பாராட்டு.
துபாய் ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தின் சர்வதேச தூதுவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோகன் அவர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் மா.பிரதீப்குமார் பாராட்டு.
துபாயில் பதிவுசெய்யப்பட்டது துபாயை தலைமையிடமாக கொண்டு கடந்த ஒரு வருடமாக சிறப்பாக வரும் ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகமானது உலகின் பல்வேறு தரப்பட்ட சாதனையாளர்களை கண்டறிந்து மென்மேலும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பாராட்டு சாதனையாளர்களை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சியில் நடைபெற்ற விழாவில் திருச்சியில் வசிக்கும் மோகனை தங்களது ஜன்ஸ்டன் உலக சாதனை புத்தகத்தின் சர்வதேச பிராண்ட் அம்பாசிட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக துபாயில் இருந்து நேரில் வருகை தந்திருந்த ஐன்ஸ்டன் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் கார்த்திக் குமார், நிர்வாக இயக்குனர் டாக்டர்.மோனிகா ரோஷினி ஆகியோர் திருச்சி உலக சிலம்ப இளையோர் சங்கம் மற்றும் சுகி பிரிண்டர்ஸ் உரிமையாளர் மோகன் அவர்களை தங்களது உலக சாதனை புத்தகத்தின் பிராண்ட் அம்பாசித்தராக நியமித்தார்கள்.
இந்நிகழ்ச்சி முனைவர்.மாணிக்கம் மற்றும் வரகனேரி ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையிலும், திருச்சி மத்திய சிறை மேனேஜர் திருமுருகன் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்ச்சியை கலைக்காவேரி சதீஸ்குமார் தொகுத்து வழங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக அரசு பள்ளி தலைமை ஆசிரியர் லதா பாலாஜி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் சிலம்ப ஆசான்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் உலகப் பொதுமறை திருக்குறளை பிராமியிலும் வட்டெழுத்திலும் எழுதி சாதனை படைத்த தமிழ் ஆசிரியர் சைவ சற்குணன் அவர்களின் சாதனையைப் பாராட்டி ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தின் சாதனை சான்றிதழை வழங்கினார்கள்.
நிகழ்ச்சி முடிவில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமாரை சந்தித்த ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தின் இயக்குனர்கள், சர்வதேச பிராண்ட் அம்பாசிட்டர் மோகன், சமீபத்தில் ஐன்ஸ்டன் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த கலை இளமணி சிலம்பம் சுகித்தா, பிரஜன், மித்ரன் மற்றும் சைவ சற்குணன் ஆகியோரை மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.