பனித ஜேம்ஸ் கல்வி மையம் திறப்பு விழா:
திருச்சி ராஜா காலனியில் புனித ஜேம்ஸ் கல்வி மையம் (இன்டர்நேஷனல் மாண்டிசேரி டீச்சர் ட்ரைனிங் இன்ஸ்டிட்யூட் திறப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 13 வருடங்களாக திருச்சி குண்டூரில் கல்வி சேவையாற்றி வந்த ஜேம்ஸ் கல்வி மையம் தற்போது திருச்சி மாநகரில் அமைந்துள்ள ராஜா காலனிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
திருச்சி அருங்கொடை இல்ல இயக்குனர் பாதிரியார் அமல்ராஜ் மையத்தை திறந்து வைத்தார்.
நிர்வாக இயக்குனர் அந்தோணிசாமி, மைய ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.