40 தொகுதிகளில் திருச்சி எம்பி தொகுதி தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியாக இருக்கும் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.
திருச்சி தெற்கு மாவட்டம், மாநகர
மலைக்கோட்டை பகுதி திமுக சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலின் ஆயத்த பணிகளுக்கான செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் தாஜ் மண்டபத்தில் நடந்தது.
பகுதி செயலாளர் மோகன் தலைமை வகித்தார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரையில் பேசியதாவது.,
“”40 தொகுதிகளிலேயே திருச்சி எம்பி., தொகுதிதான் அதிகப்படியான ஓட்டுகள் வித்யாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியாக இருக்கும். 100 க்கு 100 சதவிகிதம் ஓட்டுக்களைப் பெற அனைவரும் பாடுபட வேண்டும். இன்னும் 20 ஆண்டுகாலம் தமிழகத்தில் திமுகதான் ஆட்சி செய்யும். தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவிகிதம் நிறைவேற்றி விட்டோம்.
இன்னுமுள்ள 3 ஆண்டுகளில் மற்ற கோரிக்கைகளும், சொல்லாத கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். நாளை நமதே 40 ம் நமதே”” – என்றார்.
காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினரும்மான சுந்தர், திருச்சி மாநகர செயலாளர் மதிவாணன் சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் நிர்வாகிகள் கோவிந்தராஜன் செங்குட்டுவன் குணசேகரன் லீலாவேலு மூக்கன், சந்திரமோகன் சரோஜினி , நூர்கான், செல்லைய்யா, மற்றும் வட்டக் கழக பகுதி கழக அனைத்து நிர்வகிகளும் கலந்து கொண்டனர். முன்னதாக,
அவைத் தலைவர் செல்வராஜ் வரவேற்றார். துணைச் செயலாளர் மனோகர் நன்றி கூறினார்.