திருச்சியில் அதிமுக பாலக்கரை பகுதி சார்பில் ரமலானை முன்னிட்டு இஸ்லாமிய பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இநத நலத்திட்ட உதவிகளை கழக அமைப்பு செயலாளர் ரத்தினவேல்,
எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் ஜெ.சீனிவாசன்,
மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் பத்மநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் எம்ஜிஆர் இளைஞர் அணி திருச்சி மாவட்ட செயலாளர் சிந்தை முத்துக்குமார், சிறுபான்மை அணி நிர்வாகிகள் பகுதி செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் மற்றும் ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை காந்தி மார்க்கெட் பகுதி செயலாளர் சுரேஷ் குப்தா சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்.