Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி வழங்கினார்.

0

'- Advertisement -

 

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில்
பாராளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கிட பூத் கமிட்டி அமைக்க வேண்டும்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டிஅமைப்பது தொடர்பான மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமையில் இன்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாநில எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர், முன்னாள் அமைச்சர் .சிவபதி, மாவட்ட கழக அவைத் தலைவர் பிரின்ஸ் தங்கவேல், மாவட்ட கழக இணை செயலாளர் இந்திராகாந்தி, முன்னாள் அமைச்சர் பூனாட்சி, கழக ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் செல்வராசு, மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் செல்வராஜ், முன்னாள் மாவட்ட கழக
செயலாளர் சுப்பு,மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி முருகன், மல்லிகா சின்னசாமி, மாவட்ட பொருளாளர் சேவியர், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணை செயலாளர் திருநாவுக்கரசு, பொதுக்குழு உறுப்பினர்கள் பிரியா சிவகுமார், ஜெயராமன், சரோஜா, மல்லிகா சின்னசாமி, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் அறிவழகன் விஜய், ரமேஷ், அன்பு பிரபாகரன், பேரூர் கண்ணதாசன், பாஸ்கரன், விவேக், ஏவூர் பி.நாகராஜன், பொன்.காமராஜ், அன்னை கோபால், துரைராஜ், ஒன்றிய செயலாளர்கள் நடராஜ், ஜெயக்குமார், ஆதாளி, சேனை செல்வம், பால்மணி (எ) சுப்ரமணியன், வெங்கடேசன், ஆமூர் ஜெயராமன், ஜெயம், முத்துக்கருப்பன், ஜெயக்குமார், பிரகாசவேல், அழகாபுரி செல்வராஜ், ராம்மோகன், ராஜமாணிக்கம், குமரவேல், கடிகை கோபால், நகர கழக செயலாளர் அமைதி பாலு, பேரூராட்சி கழக செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, செந்தில்குமார், ராஜாங்கம், திருஞானம், ராஜேந்திரன், ராமச்சந்திரன், துரை சக்திவேல், சம்பத்குமார், சுப்ரமணியன், பகுதி கழக செயலாளர்கள் டைமண்ட் திருப்பதி, சுந்தர்ராஜன், மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நெடுமாறன், ஶ்ரீரங்கம் ரவிசங்கர், மருதை, வி.என்.ஆர்.செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விரைவில் அதிக உறுப்பினர்களை சேர்ப்பது, பாராளுமன்ற தேர்தல் பணிகளை விரைவாக தொடங்கிட திருச்சி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவரங்கம் , மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைத்து சிறப்பாக செயல்படுவது. திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து எடப்பாடியார் தலைமையில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.