Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

2 கோடி தொண்டர்களை கொண்ட கட்சியாக வரும் தேர்தலை சந்திக்கும், உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்வில் அதிமுக மாவட்ட செயலாளர் குமார்.

0

'- Advertisement -

 

Ad banner

அஇஅதிமு.கழக உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நகர கழகம், பேரூராட்சி கழகம், மற்றும் பகுதி கழகங்களுக்கு உறுப்பினர் சேர்க்கை படிவங்களை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் வழங்கி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.

TVK ad

நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர்கள் M.பாலசுப்பிரமணியன், A.தண்டபாணி, நகர கழக செயலாளர் SP.பாண்டியன், பேரூராட்சி கழக செயலாளர் பி.முத்துக்குமார், மற்றும் வட்ட கழக செயலாளர்கள் மற்றும் நகர, பேரூர், பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் கூறுகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் படி இன்று முதல் கட்டமாக உறுப்பினர் சேர்க்கை படிவம் விநியோகிக்கப்பட்டது.
விரைவில் அதிமுக இரண்டு கோடி தொண்டர்களை கொண்ட மாபெரும் கட்சியாக வரும் தேர்தல்களை சந்திக்க கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் கரங்களை வலுப்படுத்துவோம் என கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.