Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி வின்சென்ட் பேக்கரியில் தீ விபத்து.

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சியில் இன்று
பேக்கரியில் தீ விபத்து

திருச்சி பாரதியார் சாலை ஸ்டேட் பேங்க் தலைமை அலுவலகம் அருகே வின்சென்ட் பேக்கரி செயல்பட்டு வருகிறது.

TVK ad

இந்த பேக்கரி முன்பு வாடிக்கையாளர்கள் அமர வசதியாக கீற்று கொட்டாய் அமைக்கப்பட்டது. இந்த கீற்று கொட்டாயில் இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து அக்கம் பக்கத்து கடைக்காரர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருச்சி தீயணைப்பு நிலையில் அலுவலர் மனோகர் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து தண்ணீரை அடித்து தீயை அணைத்தனர்.

இந்த கடை அருகே பெரிய வணிகவளாகம் அமைந்துள்ளது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து தீயை அணைத்த காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கீற்று கொட்டாய் தவிர வேறு எங்கும் தீ பரவவில்லை.
விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

முதல் தளத்தில் நின்ற நபர்கள் யாரேனும் சிகரெட் குடித்துவிட்டு தீயை அணைக்காமல் போட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த தீ விபத்து அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.