Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தீபாவளியை முன்னிட்டு 15 நாட்கள் கடை போட அனுமதிக்காவிட்டால் திருச்சி என்.எஸ்.பி. ரோட்டில் கடை போடும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்

0

'- Advertisement -

திருச்சி  என்.எஸ்.பி. சாலையில் கடந்த பல வருடங்களாக 100 க்கும் மேற்பட்டோர் சாலையோரம் கடைகள் அமைத்து வவியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் போக்குவரத்தை காரணம் காட்டி அங்கிருந்த கடைகளை கடந்த ஜனவரி மாதம் அதிகாரிகள் அகற்றினர். அந்த வியாபாரிகளுக்கு இன்று வரை வியாபாரம் செய்ய மாற்றியிடம் கொடுக்கவில்லை.

Ad banner

இந்நிலையில் தீபாவளிக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் அங்கு முன்பு கடை வைத்திருந்த வியாபாரிகளுக்கு 15 நாட்களுக்கு மட்டும் என் எஸ் பி ரோட்டில் இ கடை வைக்க அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து தரைக்கடை தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று புதன்கிழமை மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு கொடுக்க 100 க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

அப்போது அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:

​இந்த 15 நாட்களில் வியாபாரிகள் சம்பாதித்துத் தங்களது வாழ்க்கையைத் தற்காத்துக் கொள்வார்கள் என்பதால், அவர்கள் வயிற்றுப் பசியுடன் இந்தக் கோரிக்கையை முன்வைத்து வருகின்றோம்.  மாநகராட்சி அதிகாரிகள் எங்களுக்கு எவ்வித பதிலும் அளிக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டு வருகின்றனர். நாங்கள் காத்திருந்து மாநகராட்சி ஆணையரை பார்த்துப் பேசிய பிறகே முடிவு எடுக்க உள்ளோம்.

​ஒருவேளை இந்தக் கோரிக்கை மறுக்கப்பட்டால், என்.எஸ்.பி. சாலையில் தினசரி போராட்டம் நடத்தி, கடை போடும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்.

தீபாவளி வரைக்கும் தற்காலிகமாகக் கடை போட அனுமதி வழங்க வேண்டும், தீபாவளிக்குப் பிறகு இடத்தைக் காலி செய்து கொள்வதாகவும் எழுத்துப்பூர்வமாக  தரவும் தயாராகவும் உள்ளதாக அனைத்துக் கடைக்காரர்கள் சார்பாகத் தெரிவிக்கப்பட்டது.

​இருப்பினும், மாநகராட்சி ஆணையரோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ எதற்கும் பதில் அளிக்கவில்லை என்றும், இது எங்களை விரட்டும் நோக்கத்தில்தான் உள்ளது என குற்றம் சாட்டினர்.

இந்தப் போராட்டத்தில் சிஐடியு ,சிபிஎம், சிபிஐ ,தமுமுக, அனைத்து தரக்கடை வியாபாரிகள் நல சங்கம் என அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக பங்கு ஏற்றனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.