Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளர் சங்க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

0

'- Advertisement -

திருச்சியில் கட்டுமானம் , அமைப்பு சாரா தொழிலாளர் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

Ad banner


தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமையில் நடந்தது.
மாநிலச் செயலாளர் அமுலு, மாநில பொருளாளர் லட்சுமி, மாவட்ட தலைவர்கள் தேனி முனியாண்டி , திருவாரூர் சதீஷ்குமார், கள்ளக்குறிச்சி மேனகா காந்திஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் டாக்டர் குருவைக்குமார் மாநில பயிற்சியாளர் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் மதுரை தினேஷ்குமார், திருவாரூர் வீரமணி, திருவண்ணாமலை லட்சுமி நரசிம்மன், ராமநாதபுரம் கண்ணதாசன்,நாகை மேனகா உள்பட மாநிலம் முழுவதிலும் இருந்து மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.