
திருச்சியில்
ஜாக்டோ ஜியோ போராட்ட ஆயத்த கூட்டம்.
ஜாக்டோ ஜியோ சார்பில் சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்தல், ஊதிய முரண்பாட்டை
களைதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், காலமுறை ஊதிய வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாழ்வாதார உரிமை மீட்பு மாவட்ட போராட்ட ஆயத்த மாநாடு இன்று திருச்சியில் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நாகராஜன், உதுமான் அலி, பழனிச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

நீலகண்டன் முன்னிலை வகித்தார். முன்னதாக குமரவேல் வரவேற்றார்.
இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகி பெரியசாமி, ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு நிர்வாகி தியாகராஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மயில் சிறப்புரையாற்றினார்.
இதில் பால்பாண்டி, ஆரோக்கியராஜ் உள்ளிட்ட ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்கள் அரசு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

