எடமலைப்பட்டி புதூரில் பிளஸ் டூ மாணவனை மிரட்டி செல்போன் பறிப்பு
2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி பகுதியில் சேர்ந்தவர் ஆல்பர்ட் இவரது மகன் நிஷாத் ராஜ் (வயது 17) இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று நிஷாத் ராஜ் மிலிட்டரி மைதானம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவரை மூன்று வாலிபர்கள் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.
இது குறித்து நிஷாத்ராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நவீன் குமார் (வயது 21) உள்ளிட்ட மூன்று சிறுவர்களை கைது செய்துள்ளனர்.