Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருவெறும்பூர் தொழிலதிபர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளை: டிஐஜி சரவணா சுந்தர் பேட்டி.

0

'- Advertisement -

 

திருச்சி திருவெறும்பூர் தொழிலதிபர் வீட்டில் 150 பவுன் நகைகள் ரூ.5 லட்சம் ரொக்கம்
உள்ளிட்ட பொருட்கள் திருட்டு.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஐஏஎஸ் நகரைச் சேர்ந்தவர் நேதாஜி. இவர் பெல் ஊழியராக பணியாற்றி விருப்ப ஒய்வு பெற்றுள்ளார். அவரது இளைய சகோதரர் தேவேந்திரன் மற்றும் மேலும் இரு சகோதரர்கள் குடும்பங்களுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமாக 6 கிரசர்கள், ரெடிமிக்ஸ் இயந்திரங்கள், தனியார் பேருந்துகள், மேலும் தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்துவருகின்றனர்.

இந்த நிலையில்,தேவேந்திரனின் இரண்டாவது மகன் பாலாஜி என்பவருக்கு திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில், மற்றொரு தொழிலதிபர் மகளுடன் நிச்சயதார்த்த விழா நேற்று காலை நடைபெற்றது.
அதற்காக அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரையும் நேதாஜி குடும்பத்தினர் பேருந்துகள் வைத்து அழைத்துச் சென்றுள்ளனர். இதை அறிந்த மர்ம நபர்கள், நேதாஜி வீட்டிற்குள் பட்ட பகலில் நுழைந்து முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். வீட்டில் இருந்த சென்சார் கருவியையும் கொள்ளையர் உடைத்ததாக கூறப்படுகிறது.
வீடு திரும்பிய நிலையில், திருட்டு சம்பவம் நடந்திருப்பது கண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

முதல் கட்ட தகவலில் வீட்டில் இருந்த 150 பவுன் நகைகள் மற்றும் ரூ. 5 லட்சம் ரொக்கம் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போய் உள்ளது தெரியவந்தது. தகவலறிந்ததும் திருவெறும்பூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் அறிவழகன், ஆய்வாளர் சந்திர மோகன், பெல் காவல் நிலைய ஆய்வாளர் கமலவேணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.தொடரந்து தடவியல் பிரிவு ஆய்வாளர் அச்சுதானந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை பதிவு செய்தனர். மேலும் மோப்ப நாய் லில்லி வரவழைக்கப்பட்டு,, திருவெறும்பூர்- கல்லணை சாலையில் சிறிது தூரம் ஓடியபின்னர் நின்று விட்டது.

சம்பவம் குறித்து தகவலறிந்த திருச்சி சரக காவல் துணைத் தலைவர் (டிஐஜி) சரவண சுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ் பி) சுஜித் குமார் ஆகியோர் சம்பவம் நடைபெற்ற வீட்டில் சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் டிஐஜி சரவணசுந்தர் கூறுகையில், இந்த வீட்டில் 150 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் கொள்ளை போய் உள்ளதாக முதல் கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக தடயவியல் பிரிவு போலீசார் மற்றும் மற்றும் மோப்ப நாய் கொண்டு துப்பு துலங்கப்பட்டு வருகிறது. மேலும் கொள்ளையர்களை பிடிக்க திருவெறும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன், பெல் காவல் நிலைய ஆய்வாளர் கமலவேணி, துவாக்குடி ஆய்வாளர் ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வெளியூர் செல்லும் பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல தெரிவித்தால், அவர்களது வீடுகளை இரவு நேரத்தில் ரோந்து பணியில் போலீஸார் கண்காணிப்பார்கள். அதை பொதுமக்கள் உணர்ந்து வெளியூர் செல்லும் பொதுமக்கள் வெளியூர் செல்வதற்கு முன்பு காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.