திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பாக இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின்106 பிறந்தநாளை முன்னிட்டு லால்குடி வடக்கு ஒன்றியம் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் லால்குடி திருமணமேடு பகுதியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு டி. அசோகன் தலைமை தாங்கினார். ஆர்பி மருதராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான ப. குமார் சிறப்புரையாற்றினார்கள்.
முன்னாள் ஒன்றிய செயலாளர் குணசீலன் வரவேற்பு உரையாற்றினார் சுக்கு என்கின்ற சுப்பிரமணி நன்றியுரை கூறினார்.
இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் சூப்பர் நடேசன், எஸ் எம் பாலன், சிவக்குமார், பொருளாளர் நெட்ஸ் இளங்கோ கழக துணை செயலாளர் சுபத்ரா தேவி அவைதலைவர் அருணகிரி, மாவட்டச் பாசறைசெயலாளர் அருண்நேரு, பொதுக்குழு உறுப்பினர் விஜயா ,நகரச் செயலாளர் பொன்னி சேகர்,ஜெயசீலன், உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் திறனாய் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.