Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் அறிவழகன் தலைமையில் 25ஆம தேதி வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்.

0

'- Advertisement -

Ad banner

நாளை மறுநாள் 25ம் தேதி புதன்கிழமை திருச்சி வடக்கு மாவட்டம் அதிமுக மாணவர் அணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டம் குறித்து மாணவர் அணி மாவட்ட செயலாளர் அறிவழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

TVK ad

இந்தி திணிப்பை எதிர்த்து மொழிப்போராட்டத்தில் அன்னை தமிழுக்காக தங்களது இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் மண்ணச்சநல்லூர் கரட்டாம்பட்டியில் மாபெரும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான மு.பரஞ்ஜோதி,முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, சிவபதி,பிரின்ஸ் தங்கவேல், கே கே பி , பூனாட்சி,அண்ணாவி.சரோஜா, தலைமைக் கழக பேச்சாளர்கள் பஞ்சாட்சரம்,சாரதா ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

மேலும் பொதுக்கூட்டத்தில்முன்னாள் எம்எல்ஏக்கள் பரமேஸ்வரி முருகன்,இந்திரா காந்தி,செல்வராசு,மல்லிகா சின்னசாமி,ஒன்றிய செயலாளர்கள் ராஜமாணிக்கம், ஆமூர் ஜெயராமன்,
ஜெயக்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள். அணி நிர்வாகிகள், ஒன்றியம்,பேரூராட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் நண்பர்கள் என திரளான பங்கேற்க உள்ளனர் என வடக்கு மாவட்ட செயலாளர் அறிவழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.