Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அனைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் தை பொங்கல் கொண்டாட்டம்

0

'- Advertisement -

 

Ad banner

அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் தை பொங்கல் கொண்டாட்டம்.

அனைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தின் நிறுவன தலைவர் செந்தில்குமார் தலைமையில், துணைத் தலைவர் கார்த்திகேயன் மற்றும் செயலாளர் ஜெயசூர்யா முன்னிலையில் அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழர்களின் திருநாளான தை 1ம் தேதி கொண்டாடப்படும் தைப்பொங்கல் திருவிழாவை சீரும் சிறப்புமாக கொண்டாடி மகிழ்ந்தனர்,
அப்போது அங்குள்ள முதியவர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன், மன மகிழ்வுடன் பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சி பொங்க சந்தோசமாக முழக்கமிட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில் எங்களது சொந்த இல்லத்தில் கூட இது போன்று பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடியது இல்லை எனவும் தற்போது அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் மனநிறைவுடன் கொண்டாடி மகிழ்ந்ததாகவும் தெரிவித்தனர்.

மேலும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் தங்களது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.