
திருச்சி கலெக்டர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் மணிகண்டம் ஒன்றியம்
இனாம் குளத்தூரில் இன்று நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் இன்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊர் பொதுமக்களுடன் பொங்கல் வைத்து, பொங்கல் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து பார்வையிட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர்
செல்வராஜ், உதவி இயக்குனர் ஊராட்சிகள் கங்காதாரணி | மணிகண்டம் ஒன்றிய குழு தலைவர் கமலம் கருப்பையா,
மணிகண்டம் ஒன்றிய திமுக செயலாளர் மாத்தூர் கருப்பையா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட வளர்ச்சி வளர்ச்சித் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்