சிறுகனூர் அருகே
கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி செயின் திருட்டு.
லால்குடி அருகே உள்ள காணக்கிளிய நல்லூரில் சர்வ லோகநாத சுவாமிகள் கோவில் அமைந்துள்ளது. இங்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கிளியநல்லூர் தேரடி மேல தெருவை சேர்ந்த கண்ணன் (வயது 54) என்பவர் இந்தக் கோயிலின் பூசாரி ஆக இருந்து வருகிறார்.
வழக்கம்போல் அவர் மாலை பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டி கொண்டு
வீட்டுக்குச் சென்றார். பின்னர் காலையில் வந்து பார்த்தபோது கோவிலின் முன்பக்க கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் கிடந்த அரை பவுன் செயினை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக கண்ணன் சிறுகனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அம்மன் தாலி செயினை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதி பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.