Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுக தெற்கு மாவட்டம் சார்பில் திமுக அரசை கண்டித்து மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

0

அதிமுக பொதுச் செயலாளரும் வருங்கால தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தில்.. அரியமங்கலம் பகுதி கழகத்தில்..

விடியா திமுக அரசின் மக்கள் விரோத செயல்களான, சட்ட ஒழுங்கு சீர்கேடு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, மற்றும் அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், அம்மா அரசின் ஏழை, எளிய மக்கள் பயன்பெற்ற பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறுத்தியதை கண்டித்தும், கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தும் அவற்றை நிறைவேற்றாத செயலை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட கூட்டத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் கண்டன பேருரை ஆற்றி சிறப்பித்தார்கள்.

மேலும் அரியமங்கலம் பகுதி கழக செயலாளர் தண்டபாணி வரவேற்று பேசினார்கள்,

மாவட்ட அமைப்பு சாராஓட்டுநர்கள் அணி செயலாளர் பாஸ்கர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சாந்தி முன்னிலை வகித்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அரியமங்கலம் முன்னாள் கோட்டதலைவர் கிருஷ்ணமூர்த்தி, 37.வது வார்டு மாமன்ற உறுப்பினர் அனுசுயா ரவிசங்கர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் கயல்விழி சேகர், மற்றும் வட்ட கழக செயலாளர்கள் ரவிசங்கர், கணேசன், தெய்வமணிகண்டன்,.சங்கர், மணி, சத்தியசீலன், வெங்கடேசன், சரவணன், சோமசுந்தரம், மாவட்ட அணி செயலாளர்கள் ராஜமணிகண்டன், சுரேஷ்குமார், மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி சார்ந்த நிர்வாகிகள் திரளாக பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.