திருச்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மையம் திறப்பு.
திருச்சி மாநகராட்சி சார்பில் தெருநாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் மற்றும் ரேபிஸ் நோய் தடுப்பு மையம் மாநகராட்சிக்கு உட்பட்ட 3 இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர்,அரியமங்கலம் குப்பை கிடங்கு,
கொட்டப்பட்டு ஜேகே நகர் ஆகிய பகுதிகளில் புதிதாக
கட்டப்பட்டுள்ளது.
இதனை மேயர் அன்பழகன் இன்று திறந்து வைத்தார் . இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் , கோட்டத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், துர்கா தேவி,நகரப் பொறியாளர் சிவபாதம், ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் ரவி செயற்பொறியாளர் குமரேசன், நகர நல அலுவலர் (பொறுப்பு) ஷர்மிலி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.