Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மொராய்ஸ் சிட்டியில் நடிகை ஆண்ட்ரியாவின் மாபெரும் இசை நிகழ்ச்சி

0

திருச்சி மொராய்ஸ் சிட்டியில் நாளை
நடிகை ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி.

திருச்சி மொராய்ஸ் சிட்டியில் இந்தியாவின் நம்பர் ஒன் டீலர் வசந்த்
அண்டு கோ மற்றும் அருண் ஈவென்ஸ் நடத்தும் பிரபல திரைப்பட நடிகை மற்றும் பின்னணி பாடகி ஆண்ட்ரியாவின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நாளை ( சனிக்கிழமை) மாலை நடைபெற உள்ளது.

திருச்சியில் முதன் முறையாக நடைபெறும் இந்த இசை விழா சர்வதேச தரத்துடன் கூடிய துல்லியமான ஒலி மற்றும் கண்களை கவரும் ஒளி அமைப்புகள் கொண்டு மிகவும் பிரம்மாண்டமான முறையில் ரசிகர்களுக்கு ஆண்ட்ரியா இசை விருந்து அளிக்க உள்ளார்.

இந்த இசை குழுவில் உள்ள இசைக் கலைஞர்கள் அனைவரும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள். இசை விழாவில் சூப்பர் ஹிட் பாடல்களை இடைவிடாது பாடி நமது திருச்சி மக்களை ரசிக்க வைப்பதுடன் தனது துள்ளலான லேட்டஸ்ட் சூப்பர் ஹிட் பாடல்களின் மூலம் ஆடவும் பாடவும் வைத்து அசத்த இருக்கின்றார்.

இந்த கலை நிகழ்ச்சி போதைப் பொருளுக்கு குட் பை சொல்லுங்கள் என்ற விழிப்புணர்வு வாசகத்துடன் போதைப் பொருட்களால் ஏற்படும் தீங்குகள் பற்றிய விழிப்புணர்வுக்காக நடத்தப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்த கலை நிகழ்ச்சிக்கு 50 ஆயிரம் பேர் வரை பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பார்வையாளர்கள் அனைவருக்கும் மழை முன்னெச்சரிக்கையாக நிகழ்ச்சி குழு சார்பாக குடைகள் மற்றும் ரெயின் கோட் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலை நிகழ்ச்சியை லட்சுமி செராமிக்ஸ், சர்வம் புரமோட்டர்ஸ், ஜோஸ் ஆலுக்காஸ், சுப்ரீம் மொபைல்ஸ், கோவை பன்னிமடை தர்சா லக்சூரி ரிசார்ட்ஸ், கிரீன் ஸ்டார், ஆப்பிள் மில்லட் சிறுதானிய உணவகம் லிம்ராஸ்,
சலோன், காவேரி மருத்துவமனை எம் எம் டெவலப்பர்ஸ் ஹேப்பி எஸ்டேட் உதயா பில்டர்ஸ் ஹோட்டல் மாதிரி தெரசா அட்வென்ச்சர் ஐ சாலையா விஸ்டம் வெல்த் இன்டர்நேஷனல் பள்ளி, விக்னேஷ் குரூப் கல்வி நிறுவனங்கள், ஹோட்டல் விலாசம் பிரிண்ட் என் கோ ஏ.வி. எல். டிரேடர், கேரேஜ் 45 ஆகிய நிறுவனங்கள் இணைந்து செய்துள்ளன.

மேலும் சேனல் பார்ட்னராக
எஸ். டி.வி இடம்பெற்றுள்ளது. ரேடியோ பார்ட்னராக மிர்ச்சி 95 எப்எம் நிறுவனமும் சமூக வலைதள பார்ட்னராக ஐ லவ் திருச்சி நிறுவனமும் இடம் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகள் புக் மை ஷோ மற்றும் பேடிஎம் இன்சைடர் ஆகிய தளங்களில் கிடைக்கும். அது மட்டும் அல்லாமல் மொராய்ஸ் சிட்டி வளாகத்தில் உள்ள நிகழ்ச்சியின் ஸ்பான்சஸ் கடைகளிலும் நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும்.

Leave A Reply

Your email address will not be published.