திருச்சி பாலக்கரை காவேரி தியேட்டர் எதிரில் மேம்பாலத்துக்கு கீழ் உள்ள பழமையான விநாயகர் கோவில் காம்பவுண்டில் திருச்சியின் சிறந்த மாநகராட்சி நிர்வாகத்தில் குப்பை கிடங்காகவும், சிறுநீர் கழிக்கும் கழிப்பறையாகவும் செயல்பட்டு வருகிறது,
அந்தப் பகுதியை கடப்பவர்கள் சிறுநீர் நாற்றத்தால் மூக்கை மூடியபடியே செல்கிறார்கள்.
பகல் நேரங்களில் கூட பெண்கள் நடமாட முடியவில்லை,
பொதுமக்கள் பெரிதும் அவதிப் படுகிறார்கள். மாநகராட்சி ஆணையர் தக்க நடவடிக்கை எடுப்பாரா என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்ப்பு.