திருச்சி கே.கே. நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை,வெள்ளி பொருட்கள் திருட்டு
திருச்சி கே கே நகர் பகுதியை சேர்ந்த ஒரு பெண் தனது வீட்டை பூட்டிவிட்டு கடலூர் சென்று விட்டார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை 3ஆம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் சென்று பிரோ கதவை உடைத்து வீட்டில் இருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் 2 கி வெள்ளிப் பொருட்களை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இந்த திருட்டு சம்பவம் குறித்து கே.கே. நகர் காவல் நிலைய போலீசாரிடம் அந்த பெண் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் கே.கே. நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து நகை திருடி மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

