முன்னாள் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கலைஞரின் 8-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி தி.மு.க. சார்பில் மௌன அஞ்சலி ஊர்வலம் மற்றும் மரியாதை செலுத்தப்பட்டது

தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 8-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 8-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மௌன அஞ்சலி ஊர்வலம் மற்றும் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி அண்ணா ஸ்டேடியம் ரவுண்டானாவில் இருந்து தொடங்கிய மௌன அஞ்சலி ஊர்வலம், டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவச் சிலையை அடைந்தது. அங்கு திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாநகர செயலாளர் மு. மதிவாணன், திமுக செய்தித் தொடர்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கவிஞர் சல்மா,
தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், கே.என். சேகரன்
பி.எம். சபியுல்லா, இலக்கிய அணி புரவலர் எம். செந்தில், மாநகராட்சி துணை மேயர் டி. திவ்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
மேலும் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூராட்சி, வட்ட, வார்டு மற்றும் கிளைக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கட்சி முன்னோடிகள் மற்றும் ஏராளமான திமுகத் தொண்டர்கள் கலந்து கொண்டு தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

