
திருச்சி வடக்கு மாவட்ட சேவா தள தலைவராக அன்பில் சி. விக்னேஷ் நியமனம்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களின் கரத்தைப் பலப்படுத்த, அன்பில் சி. விக்னேஷ் அவர்கள் திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சேவா தள தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அகில இந்திய சேவா தளத் தலைவர் பி.வி. ஸ்ரீனிவாஸ் அவர்களின் ஒப்புதலுடனும், திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் அவர்களின் பரிந்துரையினாலும் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நியமன ஆணையை தமிழ்நாடு காங்கிரஸ் சேவா தள மாநிலத் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான வழக்கறிஞர் முன்னாள் ராணுவ வீரர் குங்பூ S.X. விஜயன் வழங்கியுள்ளார்.
கட்சியின் விதிகளுக்கு உட்பட்டுப் பணியாற்றுவதாக உறுதிபூண்ட புதிதாகப் பொறுப்பேற்ற அன்பில் சி. விக்னேஷ், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார்.

