திருச்சி : சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி வழங்க மாநில செயலாளர் நாகை செல்வன் கோரிக்கை

சான்றிதழ் சாரிபார்க்கபட்ட 700 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி ஆணை வழங்க வேண்டும் அரசுக்கு கோரிக்கை
சுகாதார ஆய்வாளர் பணிக்காக சான்றிதழ் சரிபார்த்து பணிக்காக காத்திருப்பவர்கள் கூட்டம் நேற்று புதன்கிழமை 22/07/26 திருச்சி அருண் ஹோட்டலில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் மற்றும் சுகாதார அலுவலர்கள் சங்க மாநில சிறப்பு தலைவர் நாகை செல்வன் தலைமையில் நடைவெற்றது, இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சான்றிதழ்கள் சரிபார்ப்பு முடிந்த ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மானம்-1
1393 சுகாதார ஆய்வாளர்கள் பணியிடத்தை நிரப்பிய தமிழக முதல்வர் C.ஜோசப் விஜய் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
தீர்மானாம் -2.
சுகாதார ஆய்வளர் பணிக்காக சான்றிகழ் சரிபார்க்கப்பட்டு பணிக்காக காத்திருக்கும் சுமார் 712 நபர்களுக்கு பணியானை வழங்குமாறு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை பணிவோடு கேட்டுக்கொள்கிறோம், என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.