Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வரும் 31 ஆம் தேதி முதல் கால வரையற்ற விற்பனை நிறுத்தம்.திருச்சி மலைக்கோட்டை கறிக்கோழி மொத்த வியாபாரிகள் நல சங்கம் அறிவிப்பு

'- Advertisement -

Ad banner

திருச்சி மலைக்கோட்டை கறிக்கோழி மொத்த வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கோவிந்தன், செயலாளர் தங்கவேல், பொருளாளர் ஜான் கென்னடி , சுப்ரமணியபுரம் கனி மற்றும் நிர்வாகிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை மனு அளித்தனர். அதில், கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களால் வளர்த்து கொடுக்கும் பண்ணைகளில் இருந்து கறிக்கோழி கொள்முதல் செய்து, மக்களுக்கு விற்பனை செய்து வருகிறோம்.

 

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களால் வளர்த்து கொடுக்கும் பண்ணைகளில் இருந்து கறிக்கோழி கொள்முதல் செய்து, விற்பனை செய்து வருகிறோம். கடந்த 04.07.2026 அன்று திடீரென்று உற்பத்தி நிறுவனங்கள் தீவனங்கள் போட்டு அதனுடன் தான் தரமுடியும் என்று அறிவிப்பு செய்து அதனடிப்படையில் இன்று வரை கோழிகளை ஏற்றி விடுகிறார்கள். ஒரு கிலோ தீவனம் ரூ.50/- விலை உள்ளதை ரூ. 150/- விலை உள்ள கறிக்கோழி விலைக்கு நாங்கள் கொள்முதல் செய்ய வேண்டி உள்ளது. வணிகரீதியாக இதில் ஏற்படும் நஷ்டம் வாடிக்கையாளர்களை சென்றடைகிறது. மேலும் இறைச்சி போதுமான பாதுகாப்பற்றதாகவும், நிகர்வோர்களுக்கு தரமற்றதாகவும் உள்ளது. வணிகர்களாகிய எங்களுக்கு நுகர்வோர்களுக்கு தரமான இறைச்சியை தருவதே எங்களது நோக்கம்.

வண்டிகளில் அதிகமான கழிவுகள் வருகிறது. இதில் போக்குவரத்து வழிகளில் சிதறுவதுடன் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் ஏற்றிவரும் வண்டிகளின் பாடிகள் மற்றும் கோழிகளை அடைத்து கொண்டுவரும் கூண்டுகள் சீக்கிரம் துருபிடித்து மறைமுக நஷ்டமும் ஏற்படுகிறது

கறிக்கோழிகள் அறுவை கூடங்களுக்கு எடுத்து செல்வதற்கு 12 மணி நேரத்துக்கு முன்பே தீவனம் கொடுப்பது நிறுத்த வேண்டும் என்பது சர்வதேச நடைமுறை அதனை தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்படுத்தி ஆணைகள் பிறப்பித்து செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இன்று வரை அது பின்பற்றப்பட வில்லை. பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுப்புறத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் தீவன கட்டுப்பாடின்றி கோழி ஏற்றும் நடைமுறையை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்கள் மற்றும் பண்ணையாளர்களுக்கு துறைரீதியாக உத்தரவிட வேண்டும். இதை தடுக்காவிட்டால் வரும் 31ம் தேதி முதல் காலவரையற்ற விற்பனை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

'- Advertisement -

Comments are closed, but trackbacks and pingbacks are open.