Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த கல்லீரல் மாற்று சிகிச்சைக்கான ரேலா மருத்துவமனை இன்று திறப்பு.

0

'- Advertisement -

திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த கல்லீரல் மாற்று சிகிச்சைக்கான ரேலா மருத்துவமனை இன்று திறப்பு.

 

Ad banner

பேராசிரியர் முகமது ரேலா தலைமையிலான மருத்துவக் குழுவினர், இந்த புதிய மையத்தில் கல்லீரல் நோய்களுக்கான முழுமையான சிகிச்சை மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சைகளை வழங்குவார்கள்.

திருச்சி மற்றும் டெல்டா பிராந்தியத்திலிருந்து 120-க்கும் அதிகமான நோயாளிகள் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையை சென்னை, ரேலா மருத்துவமனையில் பெற்றிருக்கும் நிலையில், இவர்களில் 50-க்கும் மேற்பட்ட நபர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

 

கல்லீரல் சிகிச்சை மற்றும் உறுப்புமாற்று அறுவை சிகிச்சையில் இந்தியாவின் முன்னணி மருத்துவ மையமாகத் திகழும் ரேலா மருத்துவமனை, தனது புதிய சிகிச்சை மையத்தை திருச்சியில் திறந்துள்ளது.

 

ஸ்வேதா ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் செயல்படும் இந்த மையம், கல்லீரல் மற்றும் செரிமானக் கோளாறுகளுக்கு முழுமையான சிகிச்சையை வழங்கும். அடுத்தடுத்த கட்டங்களில், உயிருள்ளவர்கள் மற்றும் மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து தானமாகப் பெறப்படும் கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சைகள் மற்றும் கல்லீரல், குடல் புற்றுநோய்க்கான அதிநவீன சிகிச்சைகள் என இதன் சேவைகள் மேலும் விரிவுபடுத்தப்படும்.

 

ரேலா மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் பேராசிரியர் முகமது ரேலா இந்த புதிய மையத்தை திறந்து வைத்தார். ஸ்வேதா ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிறுவனரும், சென்னை ரேலா மருத்துவமனையில் பயிற்சி பெற்ற குடல் மற்றும் இரைப்பை மருத்துவருமான டாக்டர் S.N.K. செந்தூரன் முன்னிலை வகித்தார்.

ரேலா மற்றும் ஸ்வேதா மருத்துவமனைகளின் முதுநிலை மருத்துவர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளும் இத்திறப்புவிழா நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

சென்னை ரேலா மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட திருச்சி மற்றும் டெல்டா பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். சிகிச்சையின் மூலம் தாங்கள் குணமடைந்த அனுபவங்களையும் மற்றும் கல்லீரல் மாற்று சிகிச்சைக்குப் பிறகு தங்களது வாழ்க்கை குறித்தும் அவர்களில் சிலர் இந்நிகழ்வில் பகிர்ந்து கொண்டனர்.

 

TVK ad

திறப்பு விழாவை முன்னிட்டு, ரேலா மருத்துவமனை இந்த மாதம் இறுதி வரை இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்குகிறது. முன்பதிவுக்கு 8925872235 என்ற எண்ணை தொடர்பு கொண்டு, பதிவு செய்து இலவச மருத்துவ ஆலோசனையைப் பெறலாம்

 

இந்த மையத்தில் கல்லீரல் சிகிச்சைக்காக பிரத்யேகமாக 14 படுக்கைகள் கொண்ட பிரிவு, தீவிர கல்லீரல் நோய்களுக்கான சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவுகள் (ICU மற்றும் HDU) மற்றும் நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள குடல்-இரைப்பை சிகிச்சை பிரிவில் அதிநவீன எண்டோஸ்கோபி வசதி உள்ளது. குறிப்பாக, தழும்புகள் இல்லாமல் குடல் சுவரின் உள்பகுதியிலேயே சிக்கலான செரிமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் அதிநவீன ‘தேர்ட் ஸ்பேஸ் எண்டோஸ்கோபி’ வசதியும் இங்குள்ளது. இதன் மூலம் பல தருணங்களில் நோயாளிகளுக்கு திறந்தநிலை அறுவை சிகிச்சைகளின் அவசியத்தை தவிர்க்க முடியும். மேலும், பெண்களுக்கான அதிநவீன லேப்ராஸ்கோபிக் சிகிச்சை மையமும் இம்மருத்துவமனையில் செயல்படுகிறது.

 

திருச்சி மையத்தில் கல்லீரல் சிகிச்சை திட்டத்தை பேராசிரியர் முகமது ரேலாவும், ரேலா மருத்துவமனையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முதுநிலை மருத்துவர்களும் வழிநடத்துவார்கள். கல்லீரலியல் மருத்துவம் மற்றும் இரைப்பைக் குடலியல் மருத்துவக் குழுவை டாக்டர் தினேஷ் ஜோதிமணி, டாக்டர் S.N.K. செந்தூரன் மற்றும் டாக்டர் நவீன் குமார் மாரண்ணன் ஆகியோர் வழிநடத்துவார்கள்.

 

இது குறித்து பேராசிரியர் முகமது ரேலா கூறுகையில்

 

திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான நோயாளிகள் கல்லீரல் மற்றும் குடல் சார்ந்த சிறப்பு சிகிச்சைகளுக்காக தற்போது சென்னைக்கு பயணிக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக, பலரும் நோய் முற்றிய நிலையிலேயே எங்களிடம் வருகின்றனர். இதனால் சிகிச்சைக்கான வாய்ப்புகள் குறைவதோடு, சிகிச்சையின் பலன்களையும் பாதிக்கின்றன. எனவே, உலகத்தரம் வாய்ந்த கல்லீரல் மற்றும் குடல் சிகிச்சைகளை நோயாளிகளுக்கு அருகிலேயே வழங்குவதே திருச்சி ரேலா மருத்துவமனையை தொடங்கியிருப்பதன் நோக்கமாகும். நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, மருத்துவ சிகிச்சை, அதிநவீன அறுவைசிகிச்சைகள் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட முழுமையான சிகிச்சைகளை அளித்து அதிக உயிர்களைக் காப்பதே எங்களின் இலக்கு” என்றார்.

 

*டாக்டர் S.N.K. செந்தூரன் பேசுகையில்*, “தொடங்கப்பட்டிருக்கும் இந்த சிகிச்சை மையத்தின் மூலம், உலகளவில் புகழ்பெற்ற மருத்துவ நிபுணர் பேராசிரியர் முகமது ரேலா தலைமையிலான குழுவின் நிபுணத்துவத்தை இப்பகுதி மக்களுக்கு அருகிலேயே கொண்டு வந்துள்ளோம். சென்னை ரேலா மருத்துவமனையில் வழங்கப்படும் அதே உயர்தர கல்லீரல் மற்றும் குடல்-இரைப்பை சிகிச்சைகள் இனி திருச்சி ரேலா மருத்துவமனை மையத்திலும் கிடைக்கும். நிபுணர்களின் ஆலோசனை, பரிசோதனைகள், சிகிச்சை மற்றும் உறுப்புமாற்று சிகிச்சைக்குப் பிந்தைய நீண்ட கால தொடர் கண்காணிப்பு ஆகியவற்றை நோயாளிகள் இனி இங்கேயே பெற்றுக்கொள்ளலாம். இது திருச்சி, டெல்டா பகுதி மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகளின் பயண அலைச்சலை கணிசமாக குறைப்பதோடு, தடையற்ற தொடர்ச்சியான சிகிச்சைப் பராமரிப்பு எளிதாக கிடைப்பதையும் உறுதி செய்யும்” என்றார்.

 

உலகின் தலைசிறந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவரான பேராசிரியர் முகமது ரேலாவின் தலைமையில், ரேலா மருத்துவமனை 2019-ம் ஆண்டு முதல் 2,000-க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை செய்திருக்கிறது. பேராசிரியர் முகமது ரேலா தனது மருத்துவப் பயணத்தில் 6,000-க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை தனிப்பட செய்துள்ளார். குறிப்பாக பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளங்குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்ததற்காக சர்வதேச அளவில் அவர் புகழ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் சிறந்து விளங்குவதற்காகவும், உயிர்காக்கும் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை சேவைகளை விரிவுபடுத்துவதில் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையம் (TRANSTAN), ரேலா மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கி கௌரவித்துள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.