Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருவானைக்காவல் புது செக்போஸ்ட் அருகே உள்ள ஸ்கை 11-11 என்ற தனியார் மது பாரை மூடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

0

'- Advertisement -

திருச்சி மாநகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட திருவானைக்காவல் புது செக்போஸ்ட் (ஒய் ரோடு) அருகே ‘ஸ்கை 11-11’ என்ற தனியார் மது பார் செயல்பட்டு வருகிறது. இந்த பாருக்கு திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதையும்.

Ad banner

​மேலும், அரசு விதிமுறைகளுக்கு மாறாக கொள்ளிடம் பைபாஸ் சாலையில், விபத்து அதிகம் ஏற்படும் பகுதியில் இந்த பார் அமைந்துள்ளதையும், சமீபத்தில் இந்த பாரின் அருகே இரு இளைஞர்கள் விபத்தில் சிக்கி பலியாகியும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை

கண்டித்தும் உடனடியாக இந்த பாரை மூட வலியுறுத்தியும்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று

ஸ்ரீரங்கம்

​தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

​இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் பார்வதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவா, மாமன்ற உறுப்பினர் சுரேஷ், நிர்வாகக்குழு சண்முகம், மாவட்டக்குழு உறுப்பினர் அன்சர்தீன், மாவட்ட துணை செயலாளர் சுரேஷ் முத்துசாமி, பகுதி செயலாளர் ராஜா அபுதாகீர், மாதர் சம்மேளன மாவட்ட செயலாளர் அஞ்சுகம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

​ஆர்ப்பாட்டத்தில் தரைக்கடை சங்க தலைவர் சரசு, ஸ்ரீரங்கம் பகுதி துணை செயலாளர் கருணாகரன் உட்பட திரளானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.