Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி : காமராஜ் பவுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற மாநில பொதுக்கூட்டத்தில் காமராஜர் பிறந்த நாளை இந்தியா முழுவதும் கொண்டாட முடிவு

0

'- Advertisement -

ஒப்பற்ற பெருந்தலைவர் காமராஜரின் ஒழுக்கத்துடன் கூடிய தூய்மையான அரசியல் மீண்டும் எழுச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட காமராஜ் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா மாநில பொது குழு கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை திருச்சி மத்திய பேருந்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது .

Ad banner

இந்த மாநில பொதுக்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் வழக்கறிஞர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.

TVK ad

கூட்டத்திற்கு முனைவர் சேதுராமன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தேசிய பொதுச்செயலாளர் முனைவர் ஜான்குமார், முன்னாள் எம்பி நீலலோகிததாஸ் நாடார் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.

 

மேலும் திருச்சி இளங்கோவன், ராமநாதபுரம் சுல்தான் சம்சூல் கபீர், திருச்சி சிற்றம்பலம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மேலும் மத்திய கமிட்டி உறுப்பினர்கள் ஜெயக்குமார், புதுக்கோட்டை விஜய ரகுநாதன், ராமநாதபுரம் குகன், மாநில கமிட்டி உறுப்பினர்கள் முருகேசன், பிரேம் ஆனந்த், திண்டுக்கல் சுசிலா ராணி, தஞ்சாவூர் அப்துல் அஸ்ர்ப் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜூலை 15 முதல் தமிழகத்தில் ஒரு வாரம் நடைபெற உள்ள பெருந்தலைவர் காமராஜரின் 124 வது பிறந்த நாள் விழா சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் காமராஜ் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா ஆரம்பிக்கப்பட்டு ஐம்பதாம் ஆண்டு பொன்விழா சம்பந்தமாகவும், அமைப்பை பலப்படுத்துவது சம்பந்தமாகவும் ஆலோசிக்கப்பட்டது.மேலும் காமராஜர் பிறந்த நாளை இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.