Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட தடகள வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய முன்னாள் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

0

'- Advertisement -

தடகள வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார் முன்னாள் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!

Ad banner

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட தடகள வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளி கல்வித்துறை முன்னாள் அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு, வீரர்களுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

TVK ad

அப்போது அவர் பேசியதாவது:

“நமது பகுதி விளையாட்டு வீரர்கள் மாநில மற்றும் தேசிய அளவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் பல்வேறு சாதனைகளைப் படைத்து நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும். வுழ்த்தி அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும், உறுதுணையையும் நாம் தொடர்ந்து வழங்குவோம்.”

விளையாட்டு வீரர்களுக்கு நம்பிக்கையூட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்த இந்த நிகழ்வில், மாநகர செயலாளர் மு மதிவாணன் பகுதி செயலாளர் நீலமேகம் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் முத்து வெங்கடேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.