Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் திறந்த வெளி மழைநீர் வடிகால் வாய்க்காவில் தவறி விழுந்தவர் பரிதாப பலி

0

'- Advertisement -

திருச்சியில்

Ad banner

மழைநீர் வடிகால் வாய்க்காலில் பிணமாக கிடந்த ஆண் உடல் யார் அவர் கண்டேன்மென்ட் போலீசார் விசாரணை

திருச்சி தீரன்நகர் திருச்சி – திண்டுக்கல் பிரதான சாலையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தை ஒட்டி சாலை ஓரத்தில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால் உள்ளது.இந்த வாய்க்காலில் இன்று சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது.இதனைப் பார்த்து அதிர்ச்சிடைந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மழைநீர் வடிகாலில் பிணமாக கிடந்தவரை மீட்டனர்.பிறகு உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கிடங்கிற்கு

அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில்

இறந்த நபர் இரண்டு நாட்களுக்கு முன்பு மழைநீர் வடிகால் வாய்காலில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகப்படுகின்றனர். இறந்த நபர் சட்டை அணியாமல் டவுசர் மட்டும் அணிந்துள்ளார். இறந்த நபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திறந்த வெளியில் இருக்கும் இந்த மழைநீர் வடிகால் வாய்க்காலை மூட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.