Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி விமான நிலையம் அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற பெண் கைது

0

'- Advertisement -

திருச்சி விமான நிலையம் அருகில் தனியார் சுய சேவை பிரிவு வணிக வளாகம் இயங்கி வருகிறது இதில்

Ad banner

விழுப்புரம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சாதிக் அலி என்பவரது மனைவி சபுரா பேகம் (வயது 40) என்பவர் தனக்கு தேவையான பொருட்களை பெற்றுக் கொண்டு பணம் செலுத்துவதற்காக கட்டணம் செலுத்தும் இடத்திற்கு வந்த போது அவர் செலுத்திய ரூபாய் நோட்டுகள் போலியானவை (கள்ள நோட்டுகள்) என தெரிய வந்தது இதில் தொடர்ந்து அவரை உடனடியாக ஏர்போர்ட் போலீசார் வசம் ஒப்படைத்தனர். ஏர்போர்ட் போலீசாருக்கு சப்ராபேகம் கள்ள நோட்டினை மாற்ற முற்பட்டது தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவரிடமிருந்து ஆறு 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த வணிக வளாகம் பகுதியில் சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.