Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி : எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு. அடையாளம் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும் ……

0

'- Advertisement -

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளாமேடு அருகில் உள்ள பத்து கண் தரை பாலத்தின் அடியில் கடந்த வியாழக்கிழமை 07.05.2026 ம் தேதி சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் முகம், கை மற்றும் கால்கள் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

Ad banner

மேற்படி இறந்தவர் யார் என்று விசாரணை செய்ய வேண்டி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணப்பாறை உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர்காவியா,, வளநாடு காவல் ஆய்வாளர் சரண்யா மற்றும் வளநாடு காவல் உதவி ஆய்வாளர் லோகேஷ் ஆகியோர்கள்.

இறந்தவர் குறித்து வளநாடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் இறந்தவர் இடது கையில் கேஷியோ சில்வர் கலர் வாட்ச், வெள்ளை புள்ளி வைத்த கட்டம் போட்ட ப்ளூ கலர் சட்டை, ப்ளூ கலர் மற்றும் கருப்பு கலர் கலந்த துண்டு, ப்ளூ கலர் ஜட்டி மற்றும் வெளிர் பச்சை நிறம் உடைய பட்டு பார்டர் வேஷ்டி ஆகியவற்றை அணிந்திருந்தார்.

இவர் குறித்து தகவல் அறிந்தவர்கள் வரலாறு காவல் நிலைய போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் அளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.