Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி முன்னாள் எம்பி அடைக்கலராஜின் 90 – வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு ஜோசப் லூயிஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

0

'- Advertisement -

திருச்சி முன்னாள் எம்பி அடைக்கலராஜின் 90 – வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு ஜோசப் லூயிஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

Ad banner

தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணை தலைவராகவும், தொடர்ந்து 4 முறை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து மக்கள் பணியும், கட்சி பணியும் ஆற்றி திருச்சி மக்கள் அனைவரின் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற எல்.அடைக்கலராஜ் 90 -வது பிறந்த நாள் விழா இன்று (9-ந் தேதி) சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. காலை 10.30 மணிக்கு, திருச்சி ஜங்ஷன் அருகில் உள்ள ஜென்னி பிளாசாவில் உள்ள அவரது திருஉருவசிலைக்கு காங்கிரஸ் மாநில நிர்வாக குழு உறுப்பினர் தொழிலதிபர் ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜ் தலைமையில் தொழிலதிபர்கள் ஜோசப் பிரான்சிஸ், வின்சென்ட் அடைக்கலராஜ் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில்

முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி,

முன்னாள் மாவட்ட தலைவர் ஜவகர்,திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் தொட்டியம் சரவணன்,

முன்னாள் மாவட்ட பொருளாளர் ராஜா நசீர், மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன்,திருச்சி மாவட்ட காமராஜர் பேரவை தலைவர் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம்,முன்னாள் கவுன்சிலர் ஹேமா முல்லை ராஜன், முன்னாள் பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் (எ) சீனிவாசன்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்,மணிகண்டன் வட்டாரத் தலைவர் கள்ளிக்குடி சுந்தரம்,மாநிலச் செயலாளர் வக்கீல் இளங்கோ, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் அல்லூர் சுரேஷ்,வக்கீல் அல்லூர் பிரபு,ஊடகப்பிரிவு அக்காய் சிவா,திருச்சி மாவட்ட வியாபார கழகம் சார்பில் துணைத் தலைவர் ரேன்சன் தாமஸ் ஆரோக்கியராஜ்,செயலாளர் ஜார்ஜ் ராய்,பொருளாளர் கே.டி தனபால்,துணைச் செயலாளர் பக்திநாதன், மற்றும் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் புத்தூர் சார்லஸ்,முன்னாள் கோட்ட தலைவர்கள் ரவி,ஜெரால்டு ,ஓவியர் கஸ்பர்,மற்றும் நிர்வாகிகள் மேலப்புதூர் சத்தியநாதன்,உறையூர் எத்திராஜ்,அரியமங்கலம் சக்திவேல்,மணிகண்டன் கருணாகரன்,திருவரங்கம் சேட்டு,

அண்ணா சிலை விக்டர்,ஜீவா நகர் மனோகரன், செந்தண்ணீர் புரம் சத்தியமூர்த்தி, ஆட்டோ பாலு,மகளிர் காங்கிரஸ் ஜோதி,செல்வி,கலைச்செல்வி, அமிர்தவல்லி, மாநில, மாவட்ட நிர்வாகிகள், காங்கிரஸ் மூத்த முன்னோடிகள் ‘ மாவட்ட, கோட்ட வட்டார நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், துணை அமைப்பு நிர்வாகிகள் என ஏராளமானோர் திரளாக கலந்துகொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.