Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நகை வியாபாரி, ஊழியரை தாக்கி ஒரு கிலோ தங்கத்தை கொள்ளை அடித்த வட மாநில கொள்ளையர்கள் 4 பேர் கைது.கடை ஊழியரும் கைது

0

'- Advertisement -

திருச்சியில் நகை வியாபாரி, ஊழியரை தாக்கி ஒரு கிலோ தங்கத்தை கொள்ளை அடித்த வட மாநில கொள்ளையர்கள் 4 பேர் கைது.

Ad banner

தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்.

திருச்சி பெரிய செட்டி தெருவில் பழைய தங்க நகைகளை உருக்கி அதனை கட்டி ஆக்கி விற்பனை செய்யும் நகை டெஸ்டிங் கடை நடத்தி வருபவர்  உதய் (வயது 36) இவர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். வீட்டின் முதல் தளத்தில் கடை ஊழியர் நித்தின்( வயது18) என்பவர் தங்கி உள்ளார். இவரும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். இந்நிலையில் நேற்று பகல் நேரத்தில் நித்தின் தங்கி இருந்த அறைக்கதவை 4 மர்ம நபர்கள் தட்டி உள்ளனர். இதைபடுத்து உடனே அவர் கதவை திறந்து வெளியே வந்துள்ளார். அப்போது நான்கு பேரும் வியாபாரம் தொடர்பாக உரிமையாளரிடம் பேச வேண்டும் என கூறியுள்ளனர். இதையடுத்து நித்தின் உடனே உரிமையாளர் தங்கியுள்ள மேல் தளத்திற்கு அழைத்து சென்றார். பிறது

உதய் கதவைத் திறந்ததும் நான்கு பேரும் திடீர் என வேமாக வீட்டுக்குள் புகுந்து அவரை அடித்து உதைத்து குளியலறையில் தள்ளி கதவை பூட்டினார். பின்னர் நித்தினையும் அடித்து கயிற்றால் கட்டி போட்டுவிட்டு வீட்டின் பீரோவில் இருந்த ஒரு கிலோ உருக்கிய தங்கத்தையும், அங்கிருந்த சில உதய் மனைவியின் நகைகளையும் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். இதற்கிடையில் குளியலறை அறையில் அடைத்து வைக்கப்பட்ட உதய் பிளாஸ்டிக் கதவை அவர் உடைத்துக் கொண்டு வெளியே வந்துள்ளார்

பின்னர் நித்தின் கட்டுகளை அவிழ்த்து அவரை விடுவித்துள்ளார் இந்த சம்பவம் பற்றி கோட்டை போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர் கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்த

உதய்யும், நித்தினும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்றனர். இதற்கிடையில்

கொள்ளை நடந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.கொள்ளையர்களைப் பற்றி ஏதேனும் துப்பு கிடைக்குமா என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது விட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அதனை சோதனை செய்து பார்த்தபோது போலீசார் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.அந்த கேமரா மூலம் காட்சிகள் பதிவாகும் ஹார்ட் டிஸ்கையும் செல்போனையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்று விட்டதாக தெரிந்தது.இதனால் போலீசாருக்கு பெரிய குழப்பம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து

கொள்ளையர்களைப் பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின்பேரில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப் படுத்தினர்.

நகை வியாபாரி

உதய் மற்றும் அவரது ஊழியர் நித்தின் ஆகியோரது செல்போன்களை கைப்பற்றி சம்பவம் நடப்பதற்கு முன்பாக யார் யார்? தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அந்த நபர்களுக்கு இந்த கொள்ளை சம்பவத்தில் ஏதேனும் தொடர்பு உள்ளதா? நித்தினுக்கு கொள்ளை கும்பலுடன் ரகசிய தொடர்பு ஏதேனும் உள்ளதா? என்ற பல்வேறு கோணத்தில்

போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும்

கொள்ளை நடந்த வீட்டிலிருந்த கண்காணிப்பு கேமரா ஹார்டு டிஸ்கை கொள்ளையர்கள் எடுத்துச் சென்று விட்டதால் அந்த பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றபட்டன.

அதன் மூலம் கொள்ளையர்களை பிடிக்க வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

கொள்ளையர்கள் நான்கு பேரும் இந்தியில் பேசியதாக நகைக்கடை உரிமையாளர் கூறியதை தொடர்ந்து

கொள்ளை கும்பல் வட மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டனர்.

இதையடுத்து தனிப்படையினர்

இந்த சம்பவத்தில் ஊழியர் நித்தினை சந்தேகப்பட்டு விசாரணை வளையத்துக்குள் போலீசார் கொண்டு வந்து கிடுக்கு பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில்

நித்தின் தனக்கு தெரிந்த மராட்டியத்தை சேர்ந்த நபர்களை வைத்து திட்டம் போட்டு

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நித்தின் கொடுத்த தகவலின் பேரில் மராட்டிய மாநிலத்திற்கு சென்று நகை வியாபாரியை தாக்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஜாதஸ், பியுஸ் ஆனந்த், பிரவின் ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நகைக்கடை ஊழியர் நித்தினையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ஒரு கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட மராட்டிய கொள்ளை கும்பலை தனிப்படை போலீசார் இன்று ரெயில் மூலம் திருச்சி அழைத்து வர உள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.