Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி விவேகாந்த சுற்றுலா வாகன ஓட்டுநர் ஸ்டாண்டில் மே தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

0

'- Advertisement -

உழைப்பாளி மக்களின் ஒப்பற்ற தினமான மே தினம் இன்று.

Ad banner

இதனை முன்னிட்டு திருச்சியில் சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள விவேகாந்த சுற்றுலா வாகன ஓட்டுநர் ஸ்டாண்டில் சி ஐ டி யூ கொடியேற்றி கேக் வெட்டி, இனிப்பு வழங்கி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது .

TVK ad

விழாவிற்கு சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க ஜங்ஷன் பகுதி தலைவர் நூருல்ஹசன், பகுதி செயலாளர் ஆண்டனி சுரேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

சிஐடியு கொடியை சங்க மாவட்ட செயலாளர் சந்திரன் ஏற்றினார். மே தினம் குறித்து சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன் சிறப்புரை ஆற்றினார். இதில் சிஐடியு நிர்வாகிகள் சந்திரசேகர், கணேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.