டால்மியா சிமெண்ட் ஆலையில் ஆய்வு மேற்கொள்ள திருச்சி வந்த இன்ஜினியர் ஹோட்டல் அறையில் பிணமாக கிடந்ததால் பரபரப்பு.
திருச்சி ஒட்டலில் பிணமாக கிடந்த கரூர் என்ஜினியர்.

உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
கரூர் மாவட்டம் புலியூர் செல்வ நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 70) இவரது மகன்
மகுதிஸ்வரன் (வயது 42) இவர் டிப்ளமோ கெமிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஆந்திரா மாநிலத்தில் நடால்தாவில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் இவர் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள டால்மியாபுரம் சிமெண்ட் ஆலையில் ஆய்வு செய்வதற்காக திருச்சிக்கு வருகை தந்தார்.
திருச்சி காவிரி பாலம் அருகில் உள்ள ஒட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார்.பிறகு வெளியே சென்று விட்டு இரவு வந்த மகுதீஸ்வரன் சம்பவத்தன்று காலை நீண்ட நேரமாகியும் அறையை விட்டு மகுதீஸ்வரன் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஒட்டல் ஊழியர் அறைக்கு சென்று பார்த்த பொழுது அங்கு மகுதீஸ்வரன் இறந்து கிடந்து உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டல் ஊழியர் உடனடியாக கோட்டை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து கோட்டை காவல் நிலைய போலீசார் சம்பவம் நடந்த ஹோட்டலுக்கு விரைந்து சென்று பார்த்தனர்.அங்கு இறந்து கிடந்த மகுதீஸ்வரன் உடலை பரிசோதனை செய்து பார்த்தபோது உடலில் எந்தவித காயமும் இல்லை.இவர் எதனால் இறந்தார், எப்படி இறந்தார் என்பது குறித்து முழு விவரம் தெரியவில்லை.
இதை அடுத்து மகுதீஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து கோட்டைகாவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மகுதீஸ்வரன் எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.

